2025 ஆம் ஆண்ற்கான டிரையம்ப் ஸ்பீடு T4 மாடலில் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் 4 நிறங்கள் மற்றும் புதிய எக்ஸ்ஹாஸ்ட் பெற்ற தொடர்ந்து ரூ.1.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பீடு 400 பைக்கினை விட குறைந்த பவர் மற்றும் குறைந்த வசதிகளை கொண்டுள்ள ஸ்பீடு டி4 மாடலில் தொடர்ந்து 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 30.6 hp பவரையும், 5,000 rpm-ல் 36 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
நீல நிறத்துடன் மெட்டாலிக் வெள்ளை, சிவப்பு நிறத்துடன் மெட்டாலிக் வெள்ளை, கருப்பு நிறத்துடன் மெட்டாலிக் வெள்ளை மற்றும் கிரே உடன் கருப்பு என நான்கு நிறங்களும், முன்பாக வழங்கப்பட்டு வந்த கருப்பு நிற எக்ஸ்ஹாஸ்ட் மாற்றப்பட்டு, அலுமினியம் எக்ஸ்ஹாஸ்ட் உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக டி4 விலையை ரூ.18,000 வரை குறைத்த நிலையில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு, முந்தைய நிறங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.