IPL 2025: சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, புஜாரா என இந்திய அணியின் நீண்ட பேட்டிங் பாரம்பரியத்தில் தற்போது புதிதாக வந்து சேர்ந்திருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal). டெஸ்டில் கடந்தாண்டு அவர் குவித்த ரன்கள் யாருமே எதிர்பார்க்காதது. இந்திய மண்ணில் மட்டுமின்றி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய மண்ணிலும் அவர் சிறப்பாகவே ரன்கள் அடித்திருந்தார்.
IPL 2025: அன்லக்கி ஜெய்ஸ்வால்
அவர் டி20 மற்றும் டெஸ்டில் நல்ல ரன்களை குவித்தாலும் அவருக்கு ஐசிசி கோப்பையில் விளையாடும் சான்ஸ் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை எனலாம். 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓப்பனிங்கில் இறங்கியதால், கில்லுக்கும் இடமில்லை ஜெய்ஸ்வாலுக்கும் இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதற்கட்ட ஸ்குவாடில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைத்தது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் ஓப்பனிங் செட்டாகிவிட்டது. மிடில் ஆர்டரிலும் ஷ்ரேயாஸ் சிறப்பாக விளையாட ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் இடமில்லை என்பதால் ஸ்குவாடில் இருந்து தூக்கப்பட்டார். அவருக்கு பதில் மிஸ்ட்ரி ஸ்பின்னராக வரும் உள்ள வந்துள்ளார்.
IPL 2025: ஜெய்ஸ்வாலுக்கு காயம்
ஜெய்ஸ்வால்தான் இந்திய அணியின் எதிர்காலத்தில் முக்கியமான நபர் என்பதால் அவர் ஐசிசி கோப்பையை கையில் ஏந்தும் நாள்கள் வெகு தூரமில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, இன்று ரஞ்சிக் கோப்பை தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தற்போது கணுக்கால் வலி ஏற்பட்டது (Yashasvi Jaiswal) காரணமாக அவர் பெங்களூருவில் என்சிஏவுக்குச் சென்றுள்ளார். இவரது காயம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
IPL 2025: ஜெய்ஸ்வாலை நம்பியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ஸ்வால் – சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் ராஜஸ்தான் ராயல்ஸின் ஓப்பனர்கள். இருவரையும் தலா ரூ.18 கோடி கொடுத்து ராஜஸ்தான் தக்கவைத்தது. சாம்சனுக்கு விரலில் அறுவை சிகிச்சை ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஜெய்ஸ்வால் – சஞ்சு சாம்சனை நம்பி ஜாஸ் பட்லரையும் ஆர்ஆர் கழட்டிவிட்டது. தற்போது ஜெய்ஸ்வால் விளையாடாவிட்டால் யாரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரராக பிருத்வி ஷாவை எடுக்கலாம்.
IPL 2025: ஜெய்ஸ்வாலுக்கு மாற்று பிருத்வி ஷா – ஏன்?
25 வயது இளைஞரான பிருத்வி ஷா (Prithvi Shaw) உச்ச நட்சத்திரமாக உயர்ந்து வந்த காலகட்டத்திலேயே, மங்கிப்போன நட்சத்திரமாக மாறிவிட்டார். இவரை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் எடுக்கவில்லை. உள்நாட்டு போட்டிகளில் சற்று அதிரடியாக விளையாடினாலும், தொடர்ச்சியான பார்மை பார்க்க முடிவதில்லை.
இருப்பினும், 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இருக்கும்போது அவரது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் (Rahul Dravid) தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக இருப்பதால் மீண்டும் குருவிடமே சிஷ்யன் செல்வதை எதிர்பார்க்கலாம். இதன்மூலமாக கூட அவருக்கு திருப்பம் ஏற்படலாம். இவரை அடிப்படைத் தொகை ரூ.75 லட்சம்தான்.