மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு பெரும் பங்களித்த அவர், 2015-ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இருப்பினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரது பேட்டிங் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேவாக், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை முதல் வீரராக தேர்வு செய்துள்ள அவர் 2-வது வீரராக ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன்களில் தற்சமயம் விளையாடும் வீரர் விராட் மட்டுமே. மற்ற 4 பேரும் ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் தேர்வு செய்த சிறந்த 5 ஒருநாள் பேட்ஸ்மேன்கள்:-
1. விராட் கோலி (இந்தியா).
2. சச்சின் (இந்தியா).
3. இன்சமாம் – உல் – ஹக் (பாகிஸ்தான்).
4. ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா).
5. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்).