தகாத உறவு, வழிப்பறி, பாலியல் அத்து மீறல்… – சென்னை போலீஸாருக்கு என்னதான் ஆச்சு?!

மற்ற மாவட்டங்களில் போலீஸார் அப்படி இப்படி இருந்தாலும் தலைநகர் சென்னையில் பணியாற்றும் போலீஸார் கூடுதல் எச்சரிக்கையுடனும் முன் ஜாக்கிரதையுடனும் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் உடனடியாக தலைமையிடத்தின் கவனத்துக்கு சென்று அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.

ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது தலைநகர் போலீஸார் தான் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு என அனைத்துவிதமான சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு கைதாகி காவல்துறையை களங்கப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு அண்மை உதா​ரணம், சென்னை வடக்கு மண்டல போக்கு​வரத்​துக் காவல் இணை ஆணை​ய​ராக இருந்த மகேஷ் குமார். தனக்​குக் கீழ் பணி​யாற்றும் பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடு​பட்​ட​தாக இவர் மீது அந்த பெண் காவலரே புகார் கொடுத்​தார்.

மகேஷ் குமார்

இந்​தப் புகாரின் பேரில் மகேஷ் குமார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். இணை ஆணை​யர் அந்​தஸ்​தில் இருந்து கொண்டு இப்​படிச் செய்​ய​லாமா என சர்ச்​சைகள் வெடித்த நிலை​யில், “எனது கணவரும் அந்த பெண் காவலரும் இரண்டு ஆண்​டு​களாக தொடர்​பில் இருந்​தனர். தனக்கு வீடு​கட்ட 25 லட்​சம் பணம் தரவில்லை என்​ப​தற்​காக பாலியல் புகார் கொடுத்​திருக்​கிறார்.

இரண்டு ஆண்​டு​கள் சம்​மதத்​துடனே உறவில் இருந்​து​விட்டு இப்​போது பாலியல் துன்​புறுத்​தல் என்​பது சரி​யா?” என நியா​யம் கேட்​டிருக்​கிறார் மகேஷ் குமாரின் மனைவி அனு​ரா​தா. சீருடைப் பணி​யில் இருப்​பவர்​கள் எத்​தகைய ஒழுக்​கத்தை கடைபிடிக்க வேண்​டும் என்​பது அனு​ரா​தாவுக்கு தெரி​யுமா என்று தெரிய​வில்​லை.

அனு​ரா​தா

தெரிந்​திருந்​தால் கணவரின் தகாத உறவை நியாயப்​படுத்து​வது போல் பேசி இருக்க மாட்​டார். இத்​தனைக்​கும் இவரும் காவல்​துறை​யில் பணி​யாற்றிய​வர்.இதே​போல், சென்னைக்​குள் கணிச​மாக புழங்​கும் ஹவாலா பணத்​தை​யும் காவல் துறை​யில் இருப்​பவர்​கள் வழிப்​பறி திருடர்​கள் கணக்​காய் மிரட்​டிப் பறித்த சம்​பவங்​களும் தலைநகர் காவலுக்கு தலைகுனிவை ஏற்​படுத்தி இருக்​கின்​றன.

வண்ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்​பவரிடம் ரூ.20 லட்​சத்தை வரு​மானவரித் துறை​யினருடன் கைகோத்து போலீ​ஸார் வழிப்​பறி செய்த விவ​காரம் இதை அம்​பலத்​துக்​குக் கொண்டு வந்​தது. இந்​தச் சம்​பவத்​தில் ஈடு​பட்ட திரு​வல்​லிக்​கேணி ஸ்டேஷனில் சிறப்பு எஸ்​ஐ-​யாக பணி​யாற்றிய ராஜா சிங், வரு​மான வரித்​துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்​கள் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களுக்கு திட்​டம்​போட்டுக் கொடுத்​த​தாக சைதாப்​பேட்டை சட்​டம் – ஒழுங்கு சிறப்பு எஸ்​ஐ-​யான சன்னி லாய்டு​வும் சிறைக்கு அனுப்​பப்​பட்​டார்.

இந்​தக் கூட்​டணி சென்னை​யில் பல்​வேறு இடங்​களில் இது​போன்று வழிப்​பறி செய்​ததும், அப்​பணத்தை பங்​கிட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்​ததும் தெரிய​வந்​தது. இந்​தச் சம்​பவத்தை அடுத்து இன்னும் யா​ராவது இது போன்ற காரி​யங்​களில் ஈடு​பட்டு வரு​கிறார்​களா என உளவுத் துறை​யினர் இப்​போது உஷா​ராய் வி​சா​ரித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இது​குறித்து நம்​மிடம் பேசிய நேர்​மை​யான போலீ​ஸார் சிலர், “மாதச் சம்​பளத்தை தவிர அன்​பளிப்​பைக்​கூட பெறு​வது கிடையாது. அப்​படி இருக்க, இது மா​திரி​யான வழிப்​பறி வேலைகளில் ஈடு​படும் போலீ​ஸாரின் செயல்​களால் போலீஸ்னு சொல்​லிக்கவே எங்​களுக்கு கூச்​சமா இருக்​கு” என்​றார்​கள்.

இவை மட்டுமல்​ல… சைதாப்​பேட்டை ரயில் நிலை​யத்​தில், நண்​பர்​களு​டன் பேசிக்​கொண்​டிருந்த இளம் பெண்​ணிடம் கமலக்​கண்​ணன் என்ற போலீஸ்​காரர் மது போதை​யில் அத்து மீறி சஸ்​பெண்ட் ஆகி இருக்​கிறார். “போதை இல்லா தமிழகம் படைப்​போம்” எனச் சொல்​லிக் கொண்டே இருக்​கிறார் தமிழக முதல்​வர். ஆனால், போதைப் பொருள் கடத்​தல் கும்​பலுடன் தொடர்​பில் இருந்​த​தாக அவரது கட்டுப்​பாட்​டில் இருக்​கும் போலீ​ஸாரே கைதாகி அரசுக்கு சங்​கடத்தை உண்​டாக்கி வரு​கிறார்​கள். இதெல்​லாம் வெளிச்​சத்​துக்கு வந்த ஒன்​றிரண்டு சம்​பவங்​கள் தான்.

ஆனால் இன்ன​மும், தெரிந்​தும் தெரி​யாமலும் காவல்​துறைக்கு களங்​கம் உண்​டாக்​கும் காரி​யங்​களில் சென்னை காவல் துறை​யில் இருக்​கும் ஒரு சிலர் செய்து கொண்டு தான் இருக்​கிறார்​கள். சீருடை பணியின் சிறப்பை உணர்ந்து அவர்களே திருந்தினால் தான் உண்டு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.