டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி ஏற்றார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் பிப்ரவரி 18-ம் தேதி ஒய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ், […]
