Madharasi: "வடஇந்தியர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பேசுகிறது படம்'' – ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘மதராஸி’ எனத் தலைப்பு வைத்து டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இத்திரைப்படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் டைம் ஆஃப் இந்தியாவுக்குச் சிறிய நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் எப்படியானது, எஸ்.கே-வின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் எனப் பலருக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் ஏ.ஆர். முருகதாஸ், “வட இந்தியர்களின் பார்வையிலிருந்து படத்தின் கதை தொடங்கும். தென் இந்தியர்களை வட இந்தியர்கள் `மதராஸி’ என்ற வார்த்தையை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள். தற்போது அந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது குறைந்துவிட்டது. இந்த படம் வடஇந்தியர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியதுதான். அதனால் இந்த தலைப்பு சரியானதாக இருந்தது. சிவகார்த்திகேயன் ஏற்கெனவே ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நிச்சயமாக அவரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். இத்திரைப்படத்தில் அவருக்கு ரக்கடான லுக் இருக்கும். இந்தக் கதாபாத்திரம் அவருடைய தோற்றத்தைப் பற்றி பெரிதும் சிந்திக்காத வகையில் இருக்கும்.

SK & Murugadoss

கஜினி, துப்பாக்கியைப் போல இத்திரைப்படத்திலும் ஒரு தனித்துவமான எலமென்ட் ஒன்று இருக்கிறது. இப்போது அதைப் பற்றிப் பேச முடியாது. முக்கியமாக, எஸ்.கே-வின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது.” என்றவர், “பெரிய ஹீரோ திரைப்படங்களாக இருந்தாலும் அதில் வில்லனாக நடிப்பதற்கு மறுத்து வருகிறார் வித்யூத் ஜம்வால். நான் அவரை இப்படத்திற்காகத் தொடர் கொண்டபோது இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என உறுதிப்படுத்தினார். அவரைச் சந்திக்கும்போது `கதை எப்படி இருந்தாலும் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகுக் கதையும் பிடித்துப்போய் என்னை அணைத்துக் கொண்டார். பிஜூ மேனன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் வலுவானதாக இருக்கும். இன்னும் 12 நாட்கள் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு மட்டும் மீதமிருக்கிறது. இந்த கமர்சியல் திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை நிச்சயமாகத் திருப்திப்படுத்தும்.” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.