வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அந்த தேசம் நாடு கடத்தி வருகிறது. அப்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விமானம் மூலம் அவர்களது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வருகிறது அமெரிக்கா.
இந்த பயணத்தின் போது அவர்களது கையில் கைவிலங்கும், காலில் சங்கிலி பூட்டியும் அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. இதுவரை 332 இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டியது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர்.
இந்த சூழலில் தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை அந்த தேசம் நாடு கடத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் ஏற்றப்படும் சட்ட விரோத குடியேறிகளின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்பட்டுள்ளது.
சுமார் 41 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்தியா வீடியோவில் அமெரிக்க அதிகாரிகள் அதை உறுதி செய்கின்றனர். புறப்பட தயாராக இருக்கும் விமானத்தில் சட்டவிரோதமக குடியேறியவர்கள் ஏற்றப்படுவதற்கு முன்பு கை மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்படுகிறது. மேலும், அதிகாரிகள் ஒரு கூடையில் இருந்து சங்கிலியை எடுத்து சாலையில் பிரித்து வைக்கும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
Haha wow https://t.co/PXFXpiGU0U
— Elon Musk (@elonmusk) February 18, 2025