ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எப்படி எல்லாம் வருமானம் பெறுகிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் தற்போது லீக் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒரு சில தொடர்கள் மட்டுமே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதில் முதன்மையான ஒன்று இந்தியன் பிரீமியர் லீக். பல கோடிகளை உள்ளடக்கி உள்ள இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. முதன் முதலில் ஐபிஎல் தொடர் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் அவரவர் சொந்த மாநில வீரர்களை அணியில் எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்தது.

அந்த வகையில் தான் சச்சின் மும்பை அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், யுவராஜ் பஞ்சாப் அணிக்கும் விளையாடினர். தோனியை மும்பை அணி எடுக்க திட்டமிட்டது, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி நேரத்தில் தங்கள் அணியில் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் தொடங்கி ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் வரை பலர் விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல்லில் தலா ஐந்து கோப்பைகளை வென்று ஜாம்பவான் அணிகளாக உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டியை போலவே ஐபிஎல்லில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடினால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

காரணம் இரண்டு அணிகளுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் ஆதரவை தாண்டி அதிக பணம் கொட்டும் ஒரு விளையாட்டு போட்டியாக ஐபிஎல் உள்ளது. இதனால் பல கோடீஸ்வரர்கள் ஐபிஎல்லில் அணியை வாங்க போட்டி போட்டு வருகின்றனர். எட்டு அணிகளாக இருந்தது தற்போது பத்து அணிகளாக உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. வீரர்களை கோடி கோடியாக கொடுத்து வாங்கும் ஐபிஎல் அணிகள் எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும். இது தொடர்பாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஐபிஎல் உரிமையாளர்கள் எப்படி வருமானம் பெறுகின்றனர்?

ஒவ்வொரு ஐபிஎல் உரிமையாளர்களும் ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்து ஒரு அணியை உருவாக்குகின்றனர். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐபிஎல் வணிக மதிப்பு $16.4 பில்லியனாக உள்ளது. அதே சமயம் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு $3.4 பில்லியனாக உள்ளது. ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் குறிப்பிட்ட பணத்தை முதலீடாக செய்து ஐபிஎல் அணியை வாங்குகின்றனர். ஓடிடியில் ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் ஐபிஎல் உரிமையாளர்கள் குறிப்பிட்ட வருவாயை பெறுகின்றனர்.

தற்போது ஐபிஎல்லின் டைட்டில்ஸ் ஸ்பான்ஸராக டாடா நிறுவனம் உள்ளது. இதனுடன் பல பெரிய நிறுவனங்கள் துணை ஸ்பான்சர்களாக உள்ளனர். ஐபிஎல்ன் தொலைக்காட்சி ஒளிபரப்புரிமை மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்-ல் நடைபெறும் ஒரு போட்டியின் மூலம் பிசிசிஐக்கு 60 கோடி லாபம் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. ஊடக உரிமைகள் மூலம் ஐபிஎல் அணிகள் குறிப்பிட வருமானம் பெறுகின்றனர். அதேபோல மைதானத்தில் விற்கப்படும் டிக்கெடுகளில் குறிப்பிட்ட சதவீதம் அணியின் உரிமையாளர்களுக்கு சென்றடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் விளையாடப்படும் 14 கோடிகளில் 7 போட்டிகள் சொந்த மைதானங்களில் நடைபெறும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை அணி உரிமையாளர்கள் பெறுகின்றனர்.

ஸ்பான்சர்ஷிப்

இவை எல்லாவற்றையும் தாண்டி ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் கூடுதல் வருமானத்தை பெறுகின்றனர் ஐபிஎல் உரிமையாளர்கள். வீரர்கள் அணியும் ஜெர்ஸ்சிகளில் பல பிராண்டுகளின் லோகோ இடம் பெற்றிருக்கும்.  அதை ஒவ்வொன்றிற்கும் அதன் அளவைப் பொறுத்து அதன் தொகையும் மாறும். டீ சர்ட், தொப்பி ஷூ என அனைத்திலும் பிராண்டிகளின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் தங்கள் பிராண்டுகளை பங்குகளாக மாற்றி சில உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அணியிலும் யார் யார் விளையாடுகிறார்கள் என்பதை பொருத்து அந்த அணியின் மதிப்பு கூடுகிறது. உதாரணமாக விராட் கோலி, எம் எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா இருப்பதால் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு அணியின் மதிப்பு எப்போதும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.