சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

Virat Kohli Latest News | பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பிப்ரவரி 20 ஆம் தேதியான நாளை வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விராட் கோலி சுவாரஸ்மான கருதுக்களை பகிர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியா முதன்முதலாக வங்கதேசம் அணியை எதிர்கொண்டதாகவும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், அதேபோல் தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் தொடங்குவதாக விராட் கோலி கூறியுள்ளார்.

விராட் கோலி பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக விராட் கோலி பேசும்போது, ” எனக்கு எப்போதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற போட்டிகளைப் போல இந்த தொடர் இருக்காது. ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளின்போது ஒன்றிரண்டு போட்டிகளில் ஆரம்பத்தில் நீங்கள் தோற்றால் கூட அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அந்த தொடரில் நீடிக்க முடியும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை முதல் போட்டியில் இருந்தே உங்கள் மீது அழுத்தம் இருக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரில் இருக்க முடியாது. அதனால் தான் எப்போதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நான் விரும்புவேன்.” என தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கணிப்பு என்ன?

தொடர்ந்து பேசிய விராட் கோலி, ” வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டிகள் எப்போதும் சவாலாகவே இருக்கும். 2009, 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் 2011 உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் சவாலாக இருந்தன. எப்போதும் அந்த அணிக்கு எதிராக ஆடும்போது முழு போட்டியும் பரபரப்பாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றோம். இந்தமுறையும் சிறப்பாக விளையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

விராட்கோலி கூறியதுபோல் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்திய அந்த உலக கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தயது. அதைப் போலவே இம்முறையும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் வெல்லவும் வாய்ப்பு இருக்கிறது. விராட் கோலியின் இந்த கணிப்பு நிறைவேறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.