கத்தார் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா,

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), லூகா நார்டி (இத்தாலி) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 6-1, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.