பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
`லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபாமா பரம்ஸ்வரன், கயது லோகர் , மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

`டிராகன்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத். இப்படம் சிம்புவின் கரியர் கவுன்ட்டில் 51-வது திரைப்படம். இப்படத்தின் மூலம் சிம்புவின் நெருங்கிய வட்டத்திற்குள் இடம்பிடித்துவிட்டார் அஸ்வத் மாரிமுத்து. `டிராகன்’ திரைப்படத்திலும் `ஏண்டி விட்டு்ப்போன’ என்கிற பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்நிலையில் `டிராகன்’ படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார் சிம்பு.
படத்தைப் பார்த்தப் பிறகு `ப்ளாக்பஸ்டர்’ என்ற ஒரே வரியில் படம் குறித்து கூறியிருக்கிறார் சிம்பு. சிம்புவின் விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “ நன்றி சார். படம் பார்த்துவிட்டு நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். அந்த வார்த்தைகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அடுத்தது உங்களின் 51-வது படம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
#Dragon – BLOCKBUSTER @Dir_Ashwath @pradeeponelife @anupamahere @11Lohar @leon_james @nikethbommi @PradeepERagav @archanakalpathi @aishkalpathi @Ags_production
— Silambarasan TR (@SilambarasanTR_) February 20, 2025
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
