ஃபயர் படம் குறித்து சாலையில் சென்ற ரசிகர்கள் இருவர் சொன்ன ரிவியூவை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த படத்தின் நடிகர் பாலாஜி முருகதாஸ்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து சென்னை போலீஸ் அந்த இருவருக்கும் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில் ரன்னரப்பாக வந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ஃபயர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
தனக்கு இந்த படத்தில் நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தால்கூட அது தன்னுடைய நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று திரையரங்கம் வாசலில் கண்கலங்கி பேசியிருந்தார் பாலாஜி முருகதாஸ். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் கார் ஓட்டியபடி ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அப்போது வந்த ரசிகர்களிடம் பேசி இருக்கிறார். அதில் சிலர் படம் குறித்து விமர்சித்தனர்.
I’m sorry @ChennaiTraffic on behalf of them I will pay the helmet fine
Nadu road la #FireMovie review ❤️
Movie is well received even on day 5 pic.twitter.com/yWDYesPfdE— Balaji Murugadoss (@OfficialBalaji) February 18, 2025
இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படம் சூப்பர் என்று ரிவ்யூ சொன்ன வீடியோவை பாலாஜி முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் அந்த இரண்டு ரசிகர்கள் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியுள்ளனர்.
இதனை அடுத்து போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சென்னை போக்குவரத்து ஐடி -யை டாக் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர்களுக்கு விதித்த அபராதத்தையும் தானே கட்டுவதாகத் தெரிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.