ஆவடி | 4000 பேர் படிக்கும் கல்வி வளாகம் அருகே ரசாயன சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து

ஆவடி: ​திரு​முல்​லை​வா​யில் பகுதி​யில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டி​யுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்​கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே திரு​முல்​லை​வா​யில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி குழும வளாகம் உள்ளது. இந்த வளாகத்​தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியை ஒட்டி​யுள்ள இடத்​தில் தனியார் நடத்​தும் ‘தின்னர்’ எனப்​படும் ரசாயன சேமிப்பு கிடங்கு செயல்​பட்டு வருகிறது.

சார்லஸ் என்பவர் நடத்தி வந்த கிடங்​கில் தின்னர் சேமித்து வைக்​கப்​பட்டு, அம்பத்​தூர் தொழிற்​பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு வந்தது. இந்த சேமிப்பு கிடங்​கின் ஒரு பகுதி​யில் நேற்று பகல் 12 மணியள​வில் திடீரென தீப்​பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதி​களுக்​கும் பரவி கொழுந்​து​விட்டு எரிந்​தது.

தகவலறிந்து அம்பத்​தூர் தொழிற்​பேட்டை, ஆவடி, பூந்​தமல்லி, மதுர​வாயல், வில்​லிவாக்கம் உள்ளிட்ட பகுதி​களி​லிருந்து 8 வாகனங்​களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் 15 லாரி தண்ணீர், ரசாயன நுரையை பயன்​படுத்தி தீயை அணைக்​கும் பணியில் ஈடுபட்​டனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்​பிலான சுமார் 14 ஆயிரம் லிட்டர் தின்னர் முழு​மை​யும் கொழுந்​து​விட்டு எரிந்​த​தால், தீயை அணைப்​ப​தில் சிக்கல் ஏற்பட்​டது. வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்​குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்​குள் சேமிப்​புக் கிடங்கு முழு​மையாக தீக்​கிரை​யானது.

இந்த தீ விபத்​தால் ஏற்பட்ட புகை மண்டலம், தனியார் சிபிஎஸ்இ பள்ளி​யின் 3 தளங்கள் கொண்ட கட்டிடத்​தின் ஒரு பகுதி​யினுள் புகுந்​தது. உடனே அக்கட்​டிடத்​தில் இருந்த சுமார் 110 மாணவ, மாணவிகளை பள்ளி நிர்​வாகத்​தினர் துரிதமாக வெளி​யேற்றினர். இதனால் யாருக்​கும் பாதிப்பு ஏற்பட​வில்லை.

இந்த தனியார் கல்வி குழும வளாகத்​தில் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் சிபிஎஸ்இ, மெட்​ரிக்​குலேசன் ஆகிய பள்ளி​கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறு​வனம் ஆகிய​வற்றுக்​கும் உடனடியாக விடு​முறை விடப்​பட்​டது.

இந்த தீவிபத்​தால் பள்ளி வளாகத்​தில் இருந்த 5 சைக்​கிள்​கள், 2 மோட்​டார் சைக்​கிள்கள் தீக்கிரை​யாகின. பள்ளி நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகம், வகுப்​பறை​களில் இருந்த ஆயிரக்​கணக்கான நூல்​கள், 300-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களின் இருக்கைகள் என பல லட்சம் மதிப்​பிலான பொருட்கள் சேதமாகின.

தகவலறிந்த ஆவடி எம்எல்​ஏ​வும் அமைச்​சருமான சா.மு.நாசர், ஆவடி மாநக​ராட்சி மேயர் உதயகு​மார், ஆணையர் கந்தசாமி, ஆவடி வட்டாட்​சியர் உதயம், பள்ளிக்​கல்​வித் துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்பு பணி​களைத் துரிதப்​படுத்​தினர். ​திரு​முல்​லை​வா​யில் ​போலீ​ஸார் வழக்​குப் ப​திவு செய்து, ​விபத்​துக்கான ​காரணம் குறித்து தீவிர ​விசாரணை நடத்தி வருகின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.