சென்னை வரும் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் நடத்த உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, “மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழகத்தில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம், […]
