சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இன்று தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் சார்பில், வேப்பூர் அருகே திருப்பெயரில் நடைபெறும் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாட்டில் கலந்துகொள்கிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் முகாமிட்டு உள்ளார். நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட […]
