“தலைவர் விஜய் எளியவனையும் புகழடையச் செய்துள்ளார்!” – தவெக மாவட்டச் செயலாளரான ஆட்டோ ஓட்டுநர் பேட்டி

திமுக-வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக-வில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு விஜய் ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்தவர். அதுவே அவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து…

இந்தப் பதவிக்கு எப்படி தேர்வானீர்கள்? – ​விஜய் நற்பணி மன்றத்​தில் 25 ஆண்டு​களாக பயணித்து வருகிறேன். விஜய் பெயரில் 52 வாரங்கள் தொடர்ச்​சியாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தோம். ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவைகளை செய்​ததற்காக மூன்று விருதுகளை பெற்றுள்​ளேன்.

விஜய் கையில் தங்கச் சங்கி​லியை பரிசாகப் பெற்​றேன். கரோனா தொற்று காலத்​தில் கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வந்தேன். இதையெல்​லாம் அங்கீகரிக்​கும் விதமாகவே மாவட்டச் செயலா​ளராக நியமிக்​கப்​பட்​டுள்​ளேன்.

எளிய​வரான நீங்கள் மாவட்டச் செயலா​ள​ரானது பற்றி என்ன நினைக்​கிறீர்​கள்? – இதற்கு முன்பு மன்றத்​தில் மாநகர தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்​துள்ளேன். இப்போது, தலைவர் விஜய் எளிய​வனை​யும் புகழடையச் செய்​துள்ளார். அதற்​காகப் பெரு​மைப்​படு​கிறேன். கார், வண்டி, பணம், காசு இருந்​தால் தான் அரசி​யலில் ஜெயிக்க முடி​யும்

என்கிற​போது நீங்கள் எப்படிச் சமாளிப்​பீர்​கள்? – நான் ஏற்கெனவே மக்களோடு மக்களாய் கலந்​துள்ளேன். மக்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு நன்றாகத் தெரி​யும். அவர்​களுக்கான அடிப்படை வசதிகளை தெரிந்து பூர்த்தி செய்து தருவேன்.

கட்சியை வளர்க்க என்ன திட்டம் வைத்​திருக்​கிறீர்​கள்? – அடித்​தட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்று​வேன். மக்களுக்கு சேவை செய்​யும் போது கட்சி​யும் வளரும். ஏற்கெனவே மக்கள் தொடர்​புடைய பணிகளை செய்​துள்ளோம்.

போட்​டிகள் நிறைந்த அரசியல் களத்​தில் சமாளிக்க முடி​யும் என நம்பு​கிறீர்​களா? – கட்சியை வளர்ப்பது என்பது ஒரு கூட்டு முயற்சி. தனியாக எதையும் செய்ய முடி​யாது. எங்கள் தலைவர் வகுத்​துத் தரும் வியூ​கத்​தின் படி செயல்​படு​வோம். என்னுடன் கட்சி​யைப் பலப்​படுத்த நண்பர்கள் உள்ளனர். நாலு பேருக்கு டீ, காபி வாங்​கித் தரவாவது கையில் கொஞ்சம் பணம்

வேண்​டுமே… ஆட்டோ வருமானம் போது​மானதாக இருக்​குமா? – எல்லா நேரங்​களி​லும் நான் மட்டுமே மொத்​த​மாகச் செலவு செய்​வ​தில்லை. உடன் வரும் நண்பர்கள் செலவைச் சமமாக பகிர்ந்து கொள்​கின்​றனர். அதனால் எதையும் சமாளிப்​போம்.

இந்த வருமானத்​தில் குடும்பத்​தை​யும் கவனித்​துக் கொண்டு அரசி​யலை​யும் ஜெயிக்க முடி​யும் என நினைக்​கிறீர்​களா? – தலைவர் விஜய், “உன்​னால் முடி​யும்” எனச் சொல்லி இருக்​கிறார். ஆட்டோ டிரைவ​ராகத் தான் வாழ்க்கை​யைத் தொடங்​கி
னேன். அதில் கிடைக்​கும் வருமானத்​தில் குடும்பத்​தை​யும் கவனித்து வருகிறேன். நிச்​சயம் அரசி​யலிலும் ஜெயிக்க முடி​யும் என்ற நம்பிக்கை உள்ளது.

பணமே பிரதானமான உலகில் பணமில்லாத அரசி​யல்​வா​தியை மக்கள் அங்கீகரிப்​பார்கள் என நினைக்​கிறீர்​களா? – நான் ஆட்டோ டிரைவர் தான். ஆனால், மக்கள் என்னை ஆட்டோ டிரைவ​ராகப் பார்க்க​வில்லை; நல்ல மனித​ராகப் பார்க்​கின்​றனர். ஆட்டோ ஓட்டி பல சமூக சேவைகளை செய்​கிறீர்கள் என பாராட்டு​கின்​றனர். பணம் இல்லையென எங்கே​யும் என்னை ஒதுக்கி வைத்தது கிடை​யாது. பணம் இல்லையே என்ற தாழ்வுமனப்​பான்​மை​யும் எனக்கு வந்தது கிடை​யாது.

மக்களுக்கு நீங்கள் தரும் வாக்​குறுதி என்னவாக இருக்​கும்? – மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்​வோம். இப்போதைக்கு கட்சி​யின் அடிப்படை கட்டமைப்பை பலப்​படுத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக கட்​சியை வளர்ப்​போம். மக்​களுக்கு அரசின் சலுகைகளை பெற்று தர உதவி செய்​வோம். கட்சி ​சார்​பிலும் ​முடிந்த உதவிகளை மக்​களுக்​குச் செய்​வோம். அனைத்​துக்​கும் மக்​களோடு மக்​களாக நின்று குரல் ​கொடுப்​போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.