பெர்லின்,
ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தோல்வியடைந்திருப்பதை முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சியால் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது.
ஜெர்மனியில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :