தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மெகா நடைபெற்றுள்ளதால் ஒவ்வொரு அணிலும் பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்த அணி பலமாக இருக்கும் என்பது தெரியவில்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற அணிகள் மீண்டும் கோப்பையை அடிக்க தயாராகி வருகின்றனர். மறுபுறம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் கோப்பையை வெல்ல அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
More https://t.co/0USw2Fengv pic.twitter.com/YAhSjahuSV
— ICC (@ICC) February 24, 2025
இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று விளையாடினார். 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இந்த கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணிக்காக ஐசிசி தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் ரச்சின். அவர் 2023 ஒருநாள் தொடரில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பலம்
கடந்த ஆண்டு முதல் ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். சரியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிடைக்காததால் சென்னை அணி கடந்தாண்டு தோல்வி அடைந்தது. இந்நிலையில் காயம் காரணமாக இந்த ஆண்டு ரச்சின் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான அவருடைய சதம் அவரின் பார்ம் பற்றிய சந்தேகங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதே போல அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடினால் சென்னை அணிக்கு நிச்சயம் கோப்பை உறுதி என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!