ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வப்போது குறைந்த கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு திட்டங்களை வடிவமைத்து, அதை மலிவான விலையில் கொடுக்க முயற்சிக்கும் நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது எனலாம்.
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான நீண்டகால வேலிடிட்டி கொண்ட திட்டம்
அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடுபட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, நீண்டகால வேலிடிட்டி கொண்டு திட்டங்கள் சிறந்த தீர்வாக இருக்கும். அந்த வகையில் 365 நாட்கள் அதாவது ஒரு வருட வேலிடிட்டி கொண்ட இரண்டு சூப்பர் திட்டங்களை ரிலையன்ஸ் நிறுவனம் (Reliance jio) கொண்டு வந்துள்ளது.
ஜியோவின் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டங்கள்
Jioவின் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டம். 912.5 GB டேட்டா உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கிறது. இதற்கான கட்டணம் மற்றும் பிற தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.3999 திட்டம் (Jio Rs.3999 Plan)
ஜியோவின் இந்த திட்டம் ஃபேன்கோடுடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் 912.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். தினமும் 2.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். எந்த OTT சேனலையும் நேரடி ஸ்ட்ரீமிங் செய்து காணவும் அல்லது கேமிங்கிற்கு பயன்படுத்தவும் இந்த டேட்டா போதுமானதாக இருக்கும்.
ரூ.3999 திட்டத்தின் கிடைக்கும் பலன்கள்
ஜியோவின் ரூ.3999 திட்டத்தில், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுகிறீர்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் வசதி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவியின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.3599 திட்டம் (Jio Rs.3599 Plan)
ஜியோவின் இரண்டாவது திட்டமும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்திலும் 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 2.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசம்.
ஆன்லைன் ஷாப்பிங் சலுகை
ஜியோவின் இரண்டாவது திட்டத்தில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில், பல ஷாப்பிங் இணையதளங்களில் இருந்து ஷாப்பிங் செய்வதற்கான, கூப்பன்களும் உங்களுக்குக் கிடைக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கின் போது, சலுகைகளை பெற நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவியின் இலவச சந்தாவையும் பெறுவீர்கள்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் ஜியோ சினிமாவின் சந்தா மொபைலில் மட்டுமே இலவசம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். டிவியில் பார்க்க வேண்டும் என்றால் தனி சந்தா எடுக்க வேண்டும்.