விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!

Virat Kohli unique record | விராட் கோலி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து விராட் கோலி மற்றொரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் விளையாடிய அனைத்து நாடுகளிலும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

விராட் கோலி சாதனை

இந்தசதத்தின் மூலம் விராட் கோலி விநோத சாதனை படைத்திருக்கிறார். 10 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் கெய்ல் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோருடன் விராட் கோலியும் இணைந்திருக்கிறார். விராட் இதுவரை 10 நாடுகளில் சதம் அடித்துள்ளார். சச்சினும் ஜெயசூர்யாவும் தலா 12 நாடுகளில் சதம் அடித்துள்ளனர். அதேசமயம், கிறிஸ் கெய்ல் 10 நாடுகளில் சதம் அடித்துள்ளார்.

விராட்டின் விநோத சாதனை

விராட் கோலி இதுவரை 10 நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 10 நாடுகளிலும் அவர் சதம் அடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நாடுகள் அனைத்திலும் அவர் குறைந்தது ஒரு சதத்தையாவது அடித்துள்ளார். அதேநேரத்தில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய எல்லா இடங்களிலும் குறைந்தது ஒரு சதமாவது அடித்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே.

சச்சின் மற்றும் ரோஹித்

சச்சின் டெண்டுல்கரைப் பற்றிப் பேசுகையில், அயர்லாந்து, கென்யா, கனடா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக விளையாடி இருந்தாலும், அந்த நாட்டில் அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஜிம்பாப்வே, கென்யா மற்றும் மொராக்கோவில் சனத் ஜெயசூர்யா ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அதே நேரத்தில், கிறிஸ் கெய்ல் வங்கதேசம், அயர்லாந்து, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஒரு சதம் கூட அடிக்கத் தவறிவிட்டார். ரோஹித் சர்மா 12 நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், ஐந்து நாடுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. வங்கதேசம், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் அவர் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை.

கோலி மீது எதிர்பார்ப்பு

விராட் கோலியின் இந்த சாதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் அவர் விளையாடிய அனைத்து நாடுகளிலும் சதம் அடித்த உலகின் ஒரே பேட்ஸ்மேன் அவர்தான். சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களால் கூட இந்த சாதனையை செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் இப்போது சூப்பர் பார்மில் இருக்கும் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.