போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் உடல் நிலை 11வது நாளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாடிகன் “மாற்று” (Vatican “substitute”) அல்லது தலைமை ஊழியர் என்று அழைக்கப்படும் கார்டினல் பியட்ரோ பரோலின் மற்றும் பேராயர் எட்கர் பெனா பர்ரா ஆகியோரை பிரான்சிஸ் சந்தித்தார் […]
