கோழிக்கோடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநாடு மதுரையில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அரசியல் தீர்மான வரைவை அக்கட்சி சமீபத்தில் வெளியிட்டது.
அதில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவின் 10 ஆண்டு கால தொடர் ஆட்சிக்குப் பிறகு, பாஜக-ஆர்எஸ்எஸ் கைகளில் அதிகாரம் அதிகாரம் குவிந்துள்ளது. இது சர்வாதிகார பண்புகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதேநேரம், மோடி அரசை பாசிச அரசு என்று கூற முடியாது. அதேபோல இந்திய அரசையும் சர்வாதிகார அரசு என்று வகைப்படுத்தவில்லை. ஆனால், ஆனால், பாஜக-ஆர்எஸ்எஸ் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா
கார்ப்பரேட் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடாவிட்டால் பாசிசத்தை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் சிபிஐ (எம்எஸ்) ஆகிய கட்சிகள் மோடி அரசை பாசிச அரசு என்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறும்போது, “மதத்தை யும் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாசிச சித்தாந்தம் கற்பிக்கிறது. பாஜக அரசு அவற்றை நடைமுறையில் செயல்படுத்துகிறது” என்றார்.
ரகசிய உறவு: இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் கூறும்போது, “மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பாஜகவுடன் அக்கட்சிக்கு பல ஆண்டுகளாக உள்ள ரகசிய உறவு அம்பலமாகி உள்ளது. கேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் பாசிசவாதிகளுடனும் சங்பரிவார அமைப்பினருட னும் சமரசம் செய்து கொண்டுள்ளது உறுதியாகி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் களின் ஒப்புதலுடன்தான் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.