சென்னை சென்னை மாநகரட்சி இணைய வழி சேவைகள் பராமரிப்பு பணியால் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
