இந்தியாவில் வரும் மார்ச் 4, தேதி அன்று நத்திங் போன் 3a சீரிஸ் (Nothing Phone 3a Series) ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், நத்திங் ஃபோன் 2 ஸ்மார்போனை மிக மலிவாக வாங்க வாய்ப்பு வந்துள்ளது.
நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு பம்பர் சலுகை உள்ளது. நத்திங் ஃபோன் 2 மாடலின் உண்மையான சந்தை விலை ரூ.59,999. இதில் 33 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதன் காரணமாக, நீங்கள் நேரடியாக ரூ.20,000 சேமிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் பிளீப்கார்ட் (Flipkart) பல சிறந்த சலுகைகளை வழங்குகிறது. தள்ளுபடி சலுகையில் 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக் சலுகையும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர EMI 1,407 இல் வாங்கலாம்.
நத்திங் 2 ஃபோனின் அம்சங்கள்
1. நத்திங் ஃபோன் 2 இல் 6.7 இன்ச் நெகிழ்வான LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது.
2. இந்த ஃபோன் முழு HD+ தெளிவுத்திறனுடன் வருகிறது.
3. இந்த ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் 120Hz என்ற அளவில் உள்ளது,
4. ஸ்மார்ட்போனில் HDR10+ ஆதரவு கிடைக்கும்.
5. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இந்த போனில் கிடைக்கும்.
6. Qualcomm Snapdragon 8+ Gen 1 டப்போர்ட் உள்ளது.
7. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Nothing OS 2.0 ஆபரேடிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது.
8. இணை இணைப்பிற்காக Wi-Fi 6 சப்போர்ட் கிடைக்கும்.
9. ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கிடைக்கும்.
10. ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது.
நத்திங் போன் 3 விலை விபரம்
Nothing Phone 3a ஆனது 2 சேமிப்பு வகைகளுடன், 8 GB RAM மற்றும் 128 GB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்படலாம் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இதன் விலை ரூ.32,000 என இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.36,999 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | BSNL வழங்கும் அசத்தலான ரூ. 397 ரீசார்ஜ் திட்டம்.. 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா