இந்துக்களுக்கு துப்பாக்கி உரிமம் தரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்: உ.பி முதல்வர் யோகிக்கு சர்ச்சை துறவி கடிதம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் இந்துக்​களின் பாது​காப்​புக்கு துப்​பாக்கி உரிமம் தரும் விதி​முறைகளை தளர்த்த முதல்வர் யோகி ஆதித்​யநாத்​துக்கு சர்ச்சை துறவியான யத்தி நரசிங்​கானந்த் கடிதம் எழுதி​யுள்​ளார்.

உ.பி.​யின் காஜி​யாபாத்​தில் உள்ள தாஸ்னா தேவி கோயில் மடத்​தின் தலைவர் சுவாமி யத்தி நரசிங்​கானந்த். இவர் இஸ்லாமியர்​களுக்கு எதிராக அவ்வப்​போது பேசி வருவ​தால் சர்ச்​சைக்​குள்​ளானவர்.

இதுதொடர்பான புகார்​களில் சிறை​யில் அடைக்​கப்​பட்டு ஜாமீன் பெற்​றவர். இந்நிலை​யில் யத்தி நரசிங்​கானந்த் சமீபத்​தில் அவசர கூட்டம் நடத்தி ‘‘இந்​துக்கள் அனைவரும் பாது​காப்​புக்காக கைத்​துப்​பாக்​கிகள் வைத்​திருக்க வேண்​டும்’’ என்று தீர்​மானம் நிறைவேற்றினார்.

அதன்​பின் முதல்வர் ஆதித்​யநாத்​துக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் நரசிங்​கானந்த் கூறும்​போது, ‘‘துர​திருஷ்ட​வசமாக அரசி​யல்​வா​தி​களில் இந்துக்​களும், இந்து தலைவர்​களும் மதத்தை பாது​காப்​ப​தில் அக்கறை காட்டு​வ​தில்லை. தன்னை தானே பாது​காக்க இந்துக்கள் துப்​பாக்​கிகளை வைத்​திருக்க வேண்டிய நிலை ஏற்பட்​டுள்​ளது. இதற்காக துப்​பாக்கி உரிமம் கேட்டு விண்​ணப்​பிக்​கும் இந்துக்​களுக்காக அதன் விதி​முறைகளை தளர்த்தி உத்தரவிட வேண்​டும்’’ என்று கோரி​யுள்​ளார்.

உ.பி.​யில் உயர் வகுப்​பினர், அரசி​யல்​வா​தி​கள், தொழில​திபர்கள் உள்ளிட்​டோரில் பலரும் துப்​பாக்​கிகளை வைத்​திருப்பது வழக்​கம். இன்னும் சிலர் துப்​பாக்​கிகள் ஏந்திய போலீஸ் அல்லது தனியார் பாது​காவலர்களை வைத்து கொள்​கின்​றனர். துப்​பாக்கி வைத்​திருப்பதை அவர்கள் கவுர​வ​மாகவே கருதுகின்​றனர். இந்த கடிதத்தை நரசிங்​கானந்த் தனது ரத்தத்​தில் எழுதி​யுள்​ளார்.

இத்துடன், ஒரு லட்சம் பொது​மக்​களிடம் கையெழுத்து பெற்று வருகிறார். இதையும் முதல்வர் ஆதித்​யநாத்​துக்கு அனுப்ப உள்ளார். இந்த 2 கடிதங்​கள் குறித்து நரசிங்​கானந்த் ஆற்றிய உரை​யின் ​காட்​சிப் ப​திவு​களும் சமூக வலை​தளங்​களில்​ வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.