சிம்புவின் சினிமா கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். விடிவி கணேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நேற்றுடன் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள் மற்றும் பாடல்களை சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் வெளியிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள். 15 ஆண்டுகள் கடந்த நிலையில் சிம்பு விடிவி.கணேஷூடன் சேர்ந்து நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
#15yearsofVTV pic.twitter.com/ElyfgVNtfm
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025
‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்திற்கு இப்போதும் மக்கள் கொடுத்து வரும் ஆதரவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் ரிலீஸானபோதே சூப்பர் ஹிட் கொடுத்தீர்கள். மீண்டும் ரீலீஸானபோதும் 1000 நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு மேஜிக்கல் படம். உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர் ரஹ்மான் சார், த்ரிஷா மேடம் உட்பட எங்கள் படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். தொடர்ந்து கணேஷ் விடிவி கணேஷ் சிம்புவை பார்த்து, ‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா’ என கேட்க, அதற்கு சிம்புவோ, ‘இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல, வேற சொல்லுது’ என்று ஜாலியாகக் கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
