மீண்டும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆப்கான்.. செமி பைனல் போக இதை செய்தாலே போதும்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் அரை இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணி முன்னேறி உள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகிறது. 

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

நேற்று (பிப்.26) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியே முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடி 177 ரன்கள் அடித்தார். 

இதனைத் தொடர்ந்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி வரை திரிலாக சென்ற இப்போட்டியில் ஜோ ரூட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். மற்ற வீரர்களின் பங்களிப்பு சரியாக இல்லாததால் அந்த அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்த ஆப்கான் 

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அரை இறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. குரூப் ஏ-வில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. 

குரூப் பி-யில் தற்போது வரை இங்கிலாந்து அணி மட்டுமே வெளியேறி உள்ளது. குரூப் பி புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 புள்ளிகளுடன் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.  ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

மேலும் படிங்க: 36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!

அரை இறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்

குரூப் பி-யில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளன. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இங்கிலாந்து அணியுடனும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடனும் போட்டிகள் உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை வென்றால் அரை இறுதிக்கு முன்னேறும். அதே சமயம் தோற்றாலும் அரை இறுதிக்கான வாய்ப்பு அந்த அணியிடம் உள்ளது. 

ஏனென்றால், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் 5 புள்ளிகளுடன் இருக்கும். அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி 3 புள்ளிகளுடனும் ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடனும் புள்ளி பட்டியலில் இருக்கும். அப்படி இருக்கையில் ஆஸ்திரேலியா அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்குள் முன்னேறும். 

ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் முன்னேறும். ஆஸ்திரேலியாவும் தோற்று, தென் ஆப்பிரிக்காவும் தோற்றால் அங்கேயும் தென் ஆப்பிரிக்கா அணியே அரை இறுதிக்குள் முன்னேறும். எனவே ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை வென்றாலே போதுமானது. இந்த ரன் ரெட்டில் தான் வெல்ல வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடையாது. ஆஸ்திரேலியா அணியை வென்றால் மட்டுமே போதும் அரை இறுதிக்குள் முன்னேறி விடலாம். 

மீண்டும் இங்கிலாந்து அணியை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி 

சமீப காலமாக ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அது கடந்த 2023 ஒருநாள் உலக கோப்பையில் வெளிப்பட்டது. அந்த அணியின் பயிற்சியாளர் கூட, எதிரணியை தோற்கடிப்பதை விட எங்கள் அணியில் எதை சரி செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அதை சரி செய்து வருகிறோம் என்றார். அதை தெளிவாக ஆப்கானிஸ்தான் அணி செய்து வருகிறது. 

அந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. அந்த வெற்றி அந்த சமயத்தில் அந்த அணிக்கு மட்டுமல்லாது அந்நாட்டு மக்களுக்கும் பெரிய ஆறுதலை கொடுத்தது. அதேபோல் மீண்டும் ஒரு ஐசிசி தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைந்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி, வென்றது மட்டுமல்லாது அரை இறுதிக்கான வாய்ப்பையும் ஆப்கான் அணி உறுதி செய்துள்ளது. இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

தொடர் தோல்வி

இங்கிலாந்து அணி சமீபமாக படுமோசமாக விளையாடி வருகிறது. அதற்கு சிறந்த உதாரணமே கடந்த ஐசிசி தொடர்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் தான். முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்தது. தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியது என தொடர் தோல்விகளை சந்தித்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 

மேலும் படிங்க: பாபர் அசாம் தனது நண்பர்களை அணியில் சேர்த்து கொண்டார் – சேஷாத் கடும் சாடல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.