திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு! முக ஸ்டாலினை பாராட்டி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, “தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை நாய் மாதிரியும், கிளியே காக்கா மாதிரி கத்த சொன்ன என்ன செய்யும். அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்.

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கு ஒரு மொழி இருக்கு. அது தான் அடையாளம். ஆனால் எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் அடையாளம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள இந்த மொழிக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும் என்று பாருங்கள். பழமையான தமிழ் மொழி, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் நிற்கிறது. அவர் சொன்னாரு பாருங்க… என்ன நடந்தாலும் சரி இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னாரு பாருங்க… அந்த ஒரு வார்த்தை தமிழ்நாட்டு மக்கள் மனதை நெகிழ வைத்து உள்ளது. தமிழ் மொழியில் சின்ன சின்ன வார்த்தைக்கு கூட அர்த்தம் இருக்கு அடையாளம் இருக்கு எல்லாம் இருக்கு. தங்கமான மொழி. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன்.

இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழனின் மேடை, தமிழ்நாட்டினுடைய மேடை. நான் யாரையும் குறை சொல்லவில்லை என்றார். தமிழகத்தின் மூத்த மகனாக கருதப்படும் முதல்வர் ஸ்டாலின், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெறத் தயாராக இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) கட்சியின் வலுவான அடிமட்ட ஆதரவுடனும், மூலோபாயத் திட்டமிடலுடனும், அவர் தனது தலைமையை உறுதிப்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான முற்போக்கான கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்” என்று வடிவேலு பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.