ஜி.வி. பிரகாஷுக்கு நடிகராக 25-வது படம் `கிங்ஸ்டன்’.
இசையமைப்பாளராக, நடிகராக சினிமாவில் வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. வெற்றிமாறன், பா.ரஞ்சித், சுதா கொங்கரா என ஜி.வி-யுடன் பணியாற்றிய இயக்குநர்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் `மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பேசுகையில், “இந்தப் படத்துக்கு அதிகப்படியான உழைப்பை ஜி.வி சார் கொடுத்திருக்காரு. எண்ணம், சொல், செயல்னு மூணு விஷயத்திலையும் ஒரே நேர்கோட்டுல பயணிக்கிறது சிலர் மட்டும்தான். அதுல முக்கியமானவங்களாக பா.ரஞ்சித் அண்ணன், வெற்றி மாறன் சார், தாணு சார், சுதா கொங்கரா மேம்மை பார்க்கிறேன். இந்தப் படத்துல நடிச்சிருக்கிற திவ்யா பாரதி யதார்த்தமான நடிகை. நான் இன்ஸ்டாகிராம்ல 1000 பின்தொடர்பாளர்கள் வர்றதுக்கு பயங்கரமாக கஷ்டப்படுறேன். திவ்ய பாரதி சும்மா ஒரு புகைப்படத்தைப் போட்டாலே ஃபாலோவர்ஸ் அதிகமாக வர்றாங்க.

அதே மாதிரி இந்தப் படத்துல நடிச்சிருக்கிற அருணாச்சலமும் வீட்டுல இருந்து கண்டென்ட் வீடியோ போட்டு இன்னைக்கு நான்கு படங்கள் பண்ணீட்டு இருக்கான். நான் பலரையும் பாலோவ் பண்ணினாலும் வாய்ப்பு கிடைக்கமாட்டேங்குது. சினிமாவுல இன்ஸ்டாகிராம்மை பார்த்து நடிகர்களை கமிட் பண்ற சூழல் வந்துடுச்சு. `மெய்யழகன்’ ப்ரேம்குமார், `பாட்டில் ராதா’ தினகரன், இப்போ இந்தப் படத்தோட இயக்குநர் கமல் பிரகாஷ்னு மூணு பெயரும் ரொம்பவே சாஃப்ட்டாக கதை சொல்வாங்க. சினிமாவுல இருந்துகிட்டு சினிமாத்தனம் தெரியாத ஆளாக ஜி.வி சார் இருக்காரு. இத்தனை ஆண்டுகள் சினிமாவுல இருந்துட்டு சினிமாத்தனம் எதுவும் இல்லாமல் குழந்தை மாதிரி இருக்கும் சசிக்குமாரையும், ஜி.வி சாரையும் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும்.” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
