வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழா நாட்களில் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் வருகிறது.
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:-
மார்ச் 2 (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 7 (வெள்ளி) – சாப்சர் குட் (மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை)
மார்ச் 8 (2-வது சனிக்கிழமை) – வார விடுமுறை
மார்ச் 9 (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 13 (வியாழன்) -ஹோலிகா தஹான். ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை – உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளாவில் விடுமுறை
மார்ச் 14 (வெள்ளி) – ஹோலி – திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை
மார்ச் 15 (சனிக்கிழமை) – ஹோலி – அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை
மார்ச் 16 (ஞாயிறு) வார விடுமுறை
மார்ச் 22 (4-வது சனிக்கிழமை) – வார விடுமுறை மற்றும் பீகார் திவாஸ்
மார்ச் 23 (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 27 (வியாழன்) – ஷகாப் இ கதர் -ஜம்மு உள்ளூர் விடுமுறை
மார்ச் 28 (வெள்ளி) – ஜூமத் உள் விதா -ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை
மார்ச் 30 (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 31 (திங்கள்) – ரம்ஜான் விடுமுறை (மிசோரம், இமாச்சல் தவிர)
வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம். மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.