CSK vs MI: சிஎஸ்கேவை தாக்க ரெடியாகும் மும்பை; கேப்டன் யார்? பிளேயிங் லெவன் இதோ!

CSK vs MI, IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் மார்ச் 9ஆம் தேதிக்கு நிறைவடை இருக்கிறது. அதன்பின், மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, மார்ச் 23ஆம் தேதி அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

CSK vs MI: ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ்

சேப்பாக்கத்தில் இரவு நேர போட்டியாக இந்த போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 37 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதில் சேப்பாக்கத்தில் இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி உள்ளன. மும்பை அணி 5 போட்டிகளிலும், சிஎஸ்கே அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறது.

அந்த வகையில், ஒட்டுமொத்த போட்டிகளிலும், சேப்பாக்கத்திலும் சிஎஸ்கே அணி மீது மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியே மும்பை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது.

CSK vs MI: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்?

சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து மும்பையின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முயலும். இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்றவை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அந்த வகையில், முதல் போட்டியிலேயே இரு அணிகளும் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். குறிப்பாக, மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட மாட்டார் எனலாம்.

இதனால், சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார் கேப்டன்ஸியை பார்த்துக்கொள்வார், யார் அவரது இடத்தில் விளையாடுவார், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

CSK vs MI: பிளேயிங் லெவன் + இம்பாக்ட் பிளேயர்

ரோஹித் ஷர்மா, ரையன் ரிக்கில்டன்/வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராஜ் அங்கத் பவா, ராபின் மின்ஸ் (விக்கெட் கீப்பர்),  தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட், முஜீப் உர்-ரஹ்மான் (இம்பாக்ட் பிளேயர்)

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு பதில் ராஜ் அங்கத் பவாவை சேர்ப்பார்கள். கேப்டன்ஸியை இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்த்துக்கொள்வார் எனலாம். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பும்பட்சத்தில் நமன் திர் அல்லது ராஜ் அங்கத் பவா இருவரில் ஒருவர் வெளியே வைக்கப்படலாம். பிளேயிங் லெவனில் 8 இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் இம்பாக்ட் வீரர் வெளிநாட்டு வீரராக இருக்கவே வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.