ஆப்கானிஸ்தான் செமி பைனல் செல்ல முடியுமா? தென்னாப்பிரிக்கா தோற்றால் என்ன ஆகும்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான அரை இறுதி போட்டிக்குள் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றிருந்தால் அரை இறுதிக்குள் அந்த அணி நுழைந்திருக்கும். ஆனால் போட்டியானது இரண்டாவது இன்னிங்ஸின் போது மழையால் ரத்தானது. வெறும் அரை மணி நேரம் பெய்த மழையால் போட்டியானது ரத்தானது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 3 புள்ளிகளில் இருந்ததால் ஒரு புள்ளி பெற்று அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி தொடரைவிட்டு இன்னும் வெளியேறவில்லை. இன்று நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை பொருத்தே ஆப்கானிஸ்தான் எனவே அணி வெளியேறுகிறதா? அல்லது அரை இறுதிக்கு தகுதி பெறுகிறதா என்பது தெரியவரும். 

மேலும் படிங்க: IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?

தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து போட்டி 

இன்று தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 3 புள்ளிகளுடனும் இங்கிலாந்து அணி எவ்வித புள்ளியும் இன்றி புள்ளிப் பட்டியலில் உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறி தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும். 

ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி தோற்றால் என்ன ஆகும்? ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை அடைந்தது. அதனால் இன்று நடைபெறும் போட்டியே இங்கிலாந்து அணி இத்தொடரின் கடைசி போட்டி. எனவே இந்த போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அணி இருக்கும். 

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் நுழையும். அதுவே தோற்றால் அதே மூன்று புள்ளிகளுடன் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி நெட் ரன் ரேட் +2 மேல் வைத்துள்ளது. எனவே தென்னாப்பிரிக்கா அணி தோற்றாலும் அந்த அணியே அரை இறுதிக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. மிக மிக மோசமாக தோற்கும் பட்சத்தில் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிங்க: CSK vs MI: சிஎஸ்கேவை தாக்க ரெடியாகும் மும்பை; கேப்டன் யார்? பிளேயிங் லெவன் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.