அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் திணறினர்.

அதன்பிறகு, பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி,
“அ.தி.மு.க மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்கும் போது மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்தோம். அது, அடிமையாக இருந்தது கிடையாது. தேவையை பூர்த்தி செய்ய யாருடனும் இணக்கமாக செல்லவும் தயார். தேவைப்பட்டால் எதிர்க்கவும் தயார்.
இரு மொழிக் கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது. நாங்கள் அரசியலுக்காக அதை செய்யவில்லை. தி.மு.க அரசு மீது மக்களிடம் செல்வாக்கு குறைந்ததால் மும்மொழிக் கொள்கை பிரச்னையையும், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை பிரச்னையையும் கொண்டு வந்து திசை திருப்புகிறார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தில் கல்வி நிதி பிரச்னை குறித்து தி.மு.க பேச கூடாது. மும்மொழி கொள்கை குறித்தும், தொகுதி மறுவரை குறித்தும் மட்டும் தான் பேச வேண்டும்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
