இந்தியா – நியூசிலாந்து போட்டி.. ரோகித்தின் நிலை என்ன? முக்கிய பவுலர் நீக்கம்?

IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் லீக் சுற்றுகள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி நாளை (மார்ச் 02) நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11ல் சில மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தசைபிடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ரோகித் இதுவரை வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் பரவி வந்தன. 

ஆனால் துணை பயிற்சியாளர் ரயான் டென் மற்றும் கே.எல்.ராகுல் அந்த தகவலை மறுத்து இருக்கிறார்கள். இந்திய அணியில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறி இருக்கின்றனர். இந்த கருத்தை கொண்டு பார்க்கையில், ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.  

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி இந்தியா vs நியூசிலாந்து போட்டி: பிளேயிங் 11 என்ன?

ரோகித் சர்மாவுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை ரிஷப் பண்ட் மாற்று வீரராக வெளியே அமர வேண்டும் என்று தெரிகிறது. 

அதேபோல் முக்கிய பந்து வீச்சாளரான முகமது ஷமியும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது முதல் மூன்று ஓவர்கள் வீசியபின் மைதானத்தை விட்டு வெளியேறி முதலுதவி பெற்ற பின்னர் மீண்டும் களத்திற்கு வந்தார். 

எனவே இது போன்ற அசெளகரியங்கள் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அரை இறுதி போட்டி வர இருப்பதால் இப்போட்டியில் ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி முகமது பந்து வீச்சில் ஓய்வு அளிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை தவிர்த்து இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. காயம் ஏற்படாத நிலையில், அணியில் மாற்றம் ஏதும் நிகழ்த்த முன்வர வாய்ப்பில்லை. காயம் ஏற்பட்டால் மட்டுமே பிளேயிங் 11ல் மாற்றங்கள் நிகழக்கூடும். 

இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.  

மேலும் படிங்க: விராட் கோலி உடைக்கப்போகும் 6 மிகப்பெரிய கிரிக்கெட் சாதனைகள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.