"What Bro? Why bro? பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைப்பார்?" – விமர்சித்த சரத் குமார்

பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘சமத்துவ மக்கள் கட்சி’யைக் கலைத்துவிட்டு, ‘பா.ஜ.க’ பிரமுகராகியிருக்கும் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

விஜய் சமீபத்தில் ‘த.வெ.க’ 2ம் ஆண்டு தொடக்க விழாவில், “இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். அதனை மக்கள் நம்பனுமா? ‘What Bro It’s Very Wrong Bro’. இதற்கு நடுவில் நம்ம பசங்க, ‘TVKForTN’ என சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார். ஸ்லீப்பர் செல் போன்று நீங்கள் எல்லாம் எங்கே சார் இருக்கிறீர்கள்?” என்று பேசியிருந்தார்.

TVK Vijay
TVK Vijay

இந்நிலையில் சரத்குமார், “அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே பாப்புலரான நடிகர். உங்களுக்கு தமிழக அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? டேய், எங்கடா இருக்கீங்க நீங்களாம், யாருக்கிட்டட ஃபிராடுத்தனம் பண்றீங்க?

What Bro? Why bro? சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்ததுபோல விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம்” என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.