‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார்.

தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது விளம்பரம் மற்றும் மாடலிங் சூட்டில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மாளவிகா மோகனன் தன் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” ஒரு செழிப்பான காட’டின் உள்ளே, மிக அழகான அருவியின் கீழே, என் முகத்தில் மழைத் துளிகள் பட்டதை உணர்ந்து, ஒவ்வொரு மூச்சிலும் காட்டின் வாசனையை உணர்ந்து, மஞ்சள் வெயிலின் ஒளிக்கதிர்கள் மரக்கிளைகளின் வழியாக என் முகத்தில் ஒளிர்வதை உணர்ந்து… பெரும் உற்சாகமாக இருந்தேன்.
எனது ஆன்மா மிக மகிழ்ச்சியாக இருக்கும் இடம் இதுதான். இந்த அழகிய புகைப்படங்களை எடுத்த இந்த அற்புதமான குழுவை நான் பெரிதும் நேசிக்கிறேன். சிறு சிறு ஓடைகளைக் கடந்து அருவிக்குச் சென்றோம், இந்த அழகான படங்களை எடுப்பதற்காக…” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…