சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

பெய்ஜிங்: சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 லட்​சம் டன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் 60,000 ஆண்​டு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர்.

சீனா​வின் வடக்​குப் பகு​தி​யில் உள்​மங்​கோலியா அமைந்​துள்​ளது. இது சீனா​வின் தன்​னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். அங்​குள்ள பையுன் ஓபா பகு​தி​யில் அரிய வகை தாதுக்​கள் காணப்​படு​கின்​றன. அப்​பகு​தி​யில் தற்​போது 5 மிகப்​பெரிய சுரங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றில் இருந்து இரும்பு உட்பட 175 வகை​யான தாதுக்​கள் வெட்டி எடுக்​கப்​படு​கிறது.

பையுன் ஓபா பகு​தி​யில் தோரி​யம் இருப்பு குறித்து சீன விஞ்​ஞானிகள் பல ஆண்​டு​களாக ஆய்வு நடத்தி வந்​தனர். இந்த ஆய்வு சமீபத்தில் நிறைவு செய்​யப்​பட்டு சீன அரசிடம் விரி​வான அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​படி பையுன் ஓபா பகு​தி​யில் சுமார் 10 லட்​சம் டன் தோரி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் 60,000 ஆண்​டு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து சர்​வ​தேச அணு சக்தி விஞ்​ஞானிகள் மேலும் கூறிய​தாவது: அணு மின் உற்​பத்​தி​யில் யுரேனி​யம், புளூட்​டோனி​யம் தாதுக்​களுக்கு அடுத்​த​தாக தோரி​யம் தாது மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. தோரி​யத்தை பயன்​படுத்தி மேற்​கொள்​ளப்​படும் அணு மின் உற்​பத்​தி​யின்​போது சுற்​றுச்​சூழல் ​பெரிய அளவில் பாதிக்கப்ப​டாது.மின் உற்​பத்தி செலவு குறையும்.

அணு மின் சக்தி தொழில்​நுட்​பத்​தில் அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா இடையே போட்டி நில​வு​கிறது. இந்த சூழலில் சீனா​வில் பெரு​வாரி​யான தோரி​யம் கண்​டு​பிடிக்​கப்​பட்டு இருப்​பது அந்த நாட்​டுக்கு மிகப்​பெரிய ஊக்க சக்​தி​யாக அமை​யும். சீனா​வின் கோபி பாலை​வனம் பகு​தி​யில் தோரி​யம் அணு மின் நிலை​யத்தை அந்த நாட்டு அரசு அமைத்து வரு​கிறது. இந்த அணு மின் நிலை​யம் வரும் 2029-ம் ஆண்டு முதல் செயல்​படத் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதே​போல பல்​வேறு பகு​தி​களில் தோரி​யம் அணு மின் நிலை​யங்​களை அமைக்க சீனா திட்​ட​மிட்​டுள்​ளது. யுரேனி​யத்​துடன் ஒப்​பிடும்​போது தோரி​யத்​தில் இருந்து 200 மடங்கு அதிக மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச அணு சக்தி விஞ்​ஞானிகள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.