நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10ஆண்டுகளில் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாகப்பட்டினத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.139 கோடியே 92 லட்சம் மதிப்பில் 35 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.82கோடியே 99லட்சம் மதிப்பில் 206 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27லட்சத்து 31ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட […]
