Virat Kohli: '335 கேட்ச்கள்' – ரிக்கி பான்டிங், ராகுல் ட்ராவிட்டை கடந்து விராட் கோலி சாதனை!

கடந்த சில மாதங்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகள் படைத்துவருகிறார்.

சமீபத்தில் 14,000 சர்வதேச ஒருநாள் போட்டி ரன்களை சேர்த்து, இந்த சாதனையைப் படைத்த 3 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவானார்.

அதேபோல, இன்றும் ஒரு சாதனைப் பட்டியலில் தனது பெயரை சேர்த்துள்ளார்.

Team India

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 26 வயதான வீரர் விராட் கோலி 2 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் ஆடிய 301 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.

Virat Kohli Batting

Virat Kohli சாதனை

இந்தப் போட்டியில் விராட் முதல் கேட்ச் பிடித்தபோது, ரிக்கி பான்டிங்கின் 160 கேட்ச் என்ற சாதனையை சமன் செய்தார். அடுத்த கேட்சில் அதனை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதில் முதலிடத்தில் இருப்பது இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்தனே, 218 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியல்

மஹேலா ஜெயவர்தனே (Sri Lanka) – 218

விராட் கோலி (India) – 161*

ரிக்கி பாயிண்டிங் (Australia) – 160

முகமது அசாருதீன் (India) – 156

ராஸ் டெய்லர் (New Zealand) – 142

சச்சின் டெண்டுல்கர் (India) – 140

ஸ்டீபன் ஃப்லெமிங் (New Zealand) – 133

ஜாக்கஸ் காலீஸ் (South Africa) – 131

யூனிஸ் கான் (Pakistan) – 130

முத்தையா முரளிதரன் (Sri Lanka) – 130

அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்

இது தவிர, டி20, ஓருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியில் ஒரு ஃபீல்டராக அதிக கேட்ச் பிடித்த வீரராகவும் விராட் உருவாகியுள்ளார்.

அவர் விளையாடியுள்ள 559 சர்வதேச போட்டிகளில் 335 கேட்ச்கள் பிடித்துள்ளார். முன்னதாக ராகுல் ட்ராவிட் 334 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்றுவரும் போட்டியில் விராட் கோலியின் ஃபீல்டிங் கவனம் பெற்றது, பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.