Champions Trophy : இந்தியா வெற்றி… இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்

India vs Australia results : துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிறப்பாக பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 264 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அபாரமாக சேஸிங் செய்தது. இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 84 ரன்கள் அடித்து அசத்தினார்.இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் பின்வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 

அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி வெற்றிகரமாக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இலக்கை எட்டி, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை டாஸ் வெற்றி பெற்று அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் வலுவாக இருக்கும் அந்த அணி முதலில் பேட்டிங் எடுத்ததே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் பேட்டிங்கில் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரையும் எடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்தது. அதேநேரத்தில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை இந்த ஸ்கோர் சவாலாக இருக்கவில்லை. 

8 விக்கெட் வரை பேட்டிங் இருந்ததால் இந்திய அணி எப்படியும் இந்த ஸ்கோரை எட்டிவிடும் என்றே கணித்தனர். அதனைப் போலவே வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. 84 ரன்கள் எடுத்த விராட் கோலி இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், நிதானமாக விளையாடி வெற்றிக்கு அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய முழு குறிக்கோளாக இருந்தது. அது நிறைவேறியிருப்பது மிக்க மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்காக ஆடும்போது புதிய மைல்கள் வரும். இருப்பினும் தனிப்பட்ட என்னுடைய மைல்கள்களைக் காட்டிலும் அணியின் வெற்றியில் மட்டுமே மகிழ்ச்சி இருக்கும் என விராட் கோலி கூறினார். 

முடிவில் இந்திய அணி ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நாளை தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 9 ஆம் தேதி இந்திய அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும். இப்போட்டியும் துபாய் மைதானத்திலேயே நடைபெற உள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.