துபாய்,
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியாவின் விராட் கோலி 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்நிலையில், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடிய விராட் கோலி 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 5ம் இடத்தில் இருந்த விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4ம் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஒருநாள் ஆட்டத்திற்கான சிறந்த பேஸ்ட்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 2ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் கிலாசன் 3வது இடத்திலும் உள்ளனர்.
747 புள்ளிகளுடன் இந்தியாவின் விராட் கோலி 4வது இடத்திலும், 745 புள்ளிகளுடன் இந்தியாவின் ரோகித் சர்மா 5ம் இடத்திலும் உள்ளனர்.