ind vs nz: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி.. அம்பத்தி ராயுடு கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இத்தொடரின் இறுதி போட்டி மார்ச் 09 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டி மதியம் 2.10 மணிக்கு டாஸ் போடப்பட்டு 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

இத்தொடரில் இந்திய அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவிடம் மட்டும் தோல்வியை தழுவி உள்ளது. இருப்பினும் அப்போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தது நியூசிலாந்து அணி. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே சமபலம் கொண்டிருப்பதால், இறுதி போட்டியில் கடும் சவால்கள் இருக்கும். நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றி 25 ஆண்டுகள் ஆனதால் வெல்லும் முனைப்புடன் இருக்கும். 

மேலும் படிங்க: கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா அணி.. இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து!

அம்பத்தி ராயுடு கருத்து 

இந்த நிலையில், இறுதி போட்டி எப்படி இருக்கும், எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்திருக்கிறார். 

கண்டிப்பாக இறுதி போட்டியில் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். இரண்டு அணியிலுமே மேட்ச் வின்னர்ஸ் இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியில் வெறும் நான்கு வீரர்கள் மட்டுமே மேட்ச் வின்னர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை 11 வீரர்களுமே மேட்ச் வீன்னர்களாக உள்ளனர். கூடுதலாக இரண்டு வீரர்கள் வாய்ப்பு இல்லாமல் வெளியே அமந்திருக்கிறார்கள். 

எனவே இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சண்ட்னர் இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் வீரராக விளக்குவார் என நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பார். இருப்பினும் இந்திய அணியில் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள் என நான் நம்புகிறேன் என அம்பத்தி ராயுடு கூறுகிறார். 

மேலும் படிங்க: IPL: கேப்டன்ஸியை கையில் கொடுக்கும் போது தோனி என்ன சொன்னார்…? ருதுராஜ் சொன்ன சீக்ரெட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.