CSK: ருத்ராஜ் உடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யாரு…? சிஎஸ்கே கப் அடிக்க ஒரே வழி!

IPL 2025, Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. மே 25ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடைபெறுகிறது.

IPL 2025: சிஎஸ்கே பயிற்சி முகாம்

அனைத்து அணிகளும் தற்போது ஐபிஎல் தொடரை முன்னிட்டு பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத இந்திய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பயிற்சி முகாமில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஞாயிறோடு முடிவடைவதால் அடுத்த சில நாள்களில் வெளிநாட்டு வீரர்களும் இந்த முகாம்களில் இணைவார்கள் எனலாம்.

IPL 2025: இணையும் முக்கிய வீரர்கள்

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பிலும் சென்னை நாவலூரில் உள்ள சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நட்சத்திர வீரர்கள் தோனி, அஸ்வின், ஹூடா உள்ளிட்டோர் முகாமில் இணைந்துவிட்டனர். அப்படியிருக்க, சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்ததும், ஜடேஜா, கான்வே, ரச்சின் ரவீந்திரா, நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட பலரும் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

IPL 2025: டெவான் கான்வேவுக்கு பதில் ரச்சின் ரவீந்திரா

அப்படியிருக்க சிஎஸ்கே அணியின் முதன்மையான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது பலருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது. அதிலும், பதிரானாவுக்கு பதில் நாதன் எல்லிஸை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்பதை நாம் முதலிலேயே பார்த்தோம். அதேபோல், ஓப்பனிங்கில் டெவான் கான்வேவுக்கு பதில் ரச்சின் ரவீந்திராவை ஏன் சேர்க்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

IPL 2025: கான்வேவின் மோசமான பார்ம்

டெவான் கான்வே கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் இருந்தே மிகவும் மோசமான பார்மில்தான் இருக்கிறார். ஓரிரு போட்டிகளில் அவ்வப்போது அவர் ரன்களை அடிக்கிறார் என்றாலும் அவர் நல்ல ரிதமில் இல்லை. மேலும், சிஎஸ்கே அணி நிச்சயம் மிரட்டலான தொடக்க வீரரையே எதிர்பார்க்கும் என்பதால், கான்வேயின் சமீபத்தில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

IPL 2025: ரச்சின் ரவீந்திராவின் முரட்டு பார்ம்

அந்த வகையில், சிஎஸ்கே அணி அதன் ஓப்பனிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ரச்சின் ரவீந்திராவை களமிறக்க வேண்டும் என கூறப்படுகிறது. அவர் சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ந்து 2 சதங்களை அடித்திருப்பது மட்டுமின்றி அவர் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடும் பாணியை கையில் வைத்திருக்கிறார். சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றால் சிஎஸ்கேவின் ஓப்பனர்கள் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்திருப்பார்கள். ஒருவேளை சிஎஸ்கேவின் ஓப்பனர்கள் சொதப்பினால் அந்த அணி கோப்பை வெல்லாது என்றும் கூறலாம்.

IPL 2025: சிஎஸ்கே வெளிநாட்டு வீரர்கள் வரிசை

ரச்சின் ரவீந்திரா சுழலையும் நன்கு விளையாடுவார், பவர்பிளேவுக்கு பின்னரும் அதிரடியாக விளையாடும் வல்லமை கொண்டவர். இதனால், கான்வேவுக்கு பதில் ரவீந்திராவையே அணியில் சேர்க்க வேண்டும். ரவீந்திரா, சாம் கரன், ஜேமி ஓவர்டன்/நூர் அகமது, பதிரானா/எல்லிஸ் ஆகியோரை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வைத்திருக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.