ரெனால்ட் நிறவனத்தின் க்விட், கிகர், மற்றும் ட்ரைபர் என மூன்று மாடல்களுக்கும் ரூ.73,000 முதல் ரூ.78,000 வரை தள்ளுபடியை MY2024 மாடல்களுக்கும், MY2025 மாடல்களுக்கு ரூ.43,000-ரூ.48,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
குறிப்பாக ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ், கூடுதலாக கார்ப்ரேட் போன்ஸ் என ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றது. அதிகபட்ச சலுகை கிடைக்கின்ற கிகர் 2024 மாடலுக்கு ரொக்க தள்ளுபடி ரூ.45,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் போன்றவை முறையே 15,000 மற்றும் 10,000 வரை வழங்கப்படுகின்றது. கூடுதலாக கார்ப்ரேட் போனஸ் ரூ.8,000 கிடைக்கின்றது.
2025 ஆம் ஆண்டு கிகர் மாடலுக்கு ரூ.15,000 வரை கேஸ் தள்ளுபடி உடன் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை என ஒட்டுமொத்தமாக ரூ.4,000 கிடைக்கின்றது.
ட்ரைபர், க்விட் 2024 மாடலுக்கு ரொக்க தள்ளுபடி ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் போன்றவை முறையே 15,000 மற்றும் 10,000 வரை வழங்கப்படுகின்றது. கூடுதலாக கார்ப்ரேட் போனஸ் ரூ.8,000 கிடைக்கின்றது.
2025 ஆம் ஆண்டு ட்ரைபர், க்விட் மாடலுக்கு ரூ.10,000 வரை கேஸ் தள்ளுபடி உடன் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை என ஒட்டுமொத்தமாக ரூ.43,000 கிடைக்கின்றது.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் டீலரை பொறுத்தும், கையிருப்பில் உள்ள ஸ்டாக்கினை பொருத்து மாறுபடும். சமீபத்தில் 2025 ரெனோ கார்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனும் வந்துள்ளது.