Champions Trophy Toss : பெரிய எதிர்பார்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பிற்பகல் தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில் கடைசி நேர அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி டாஸ் வெற்றி பெறாத அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதாவது இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட டாஸ் வெற்றி பெறவில்லை. ஆனால் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. அதே ராசி இன்றைய போட்டியிலும் தொடர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
அதனால் இறுதிப்போட்டிக்கு முன்பே டாஸ் விழுவதை பார்த்து இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறுமா அல்லது பெறதா என்பதை யூகித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். பிற்பகல் 2 மணிக்கு போடப்படும் டாஸில் இந்திய அணி வெற்றி பெறாமல் தோல்வியை தழுவினாலே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்றும் சமூக ஊடகங்களில் தங்களின் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இறுதிப்போட்டி தொடங்கும் நேரம்
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் செயலிலும் பல்வேறு மொழிகளில் நீங்கள் நேரலையில் போட்டியை காணலாம் (India vs New Zealand Live Telecast).
IND vs NZ பிளேயிங் லெவன் ;
இந்தியா பிளேயிங் 11 (உத்தேசமாக): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து பிளேயிங் லெவன் (உத்தேசமாக) : ரச்சின் ரவீந்திர, டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (WK), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (C), கைல் ஜேமீசன், ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ’ரூர்க்