மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம்: தமிழக முதல்வரின் முயற்சிக்கு அமர் சேவா சங்கம் நன்றி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதி காரம் அளிக்கும் முயற்சியை மேற் கொண்டுள்ளதற்காக முதல்வர் மு.க.ஸ் டாலினுக்கு அமர் சேவா சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித் துவம் அளித்து சமத்துவத்தை வளர்க் கும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் உருவாகும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையால் ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளை நியமனம் செய்யப்படு வதன் மூலம் அதிகாரமளிப்பதுடன் அவர்களின் வளர்ச்சியை தமிழக அரசு கணிசமாக மேம்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பலதரப்பட்ட திறமைகளில் இருந்து பயனடையும் சமூகத்தை உருவாக்கும் ஒரு மாற்றத் துக்கான நிகழ்வாக அமர் சேவா சங்கம் பார்க்கிறது.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி மக்கள் தொகை 13 லட்சத்துக்கும் அதி கமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, நிர்வாகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் நிர் வாகத் திறனை மேம்படுத்தும். மேலும் இது பிற மாநிலங்களுக்கு முன் மாதிரி யாகவும் அமையும்.

இதுகுறித்து அமர் சேவா சங்கத் தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் எஸ்.சங்கரராமன் ஆகியோர் கூறும்போது, கொள்கை வகுப்பில் அர்த்தமுள்ள பங்களிப்பை ஊக்குவித்தல், திறம்பட செயல்படுத் துதல் மற்றும் நீண்டகால தாக்கத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

கடந்த 1981-ம் ஆண்டு நிறுவப் பட்ட அமர் சேவா சங்கம் மாற்றுத் திறனாளிகளின் மேலாண்மை மற் றும் உள்ளடக்கிய மேம்பாட்டில் முன் னோடியாக இருந்து வருகிறது, கல்வி. தொழில் பயிற்சி மற்றும் சமூக மறு வாழ்வு போன்ற சேவைகளை வழங்கு கிறது. தன்னம்பிக்கையை வளர்த்தல் போன்ற நோக்கங்களில் இந்த அமைப்பு உறுதியாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.