IND vs NZ: இன்று தோற்றாலும் ஜெயித்தாலும்… ஓய்வை அறிவிக்கும் இந்த 4 இந்திய வீரர்கள்

India National Cricket Team: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025 Final) தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் (India vs New Zealand Final) கோப்பைக்காக மோதும் இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Team India Retirement: இந்த 4 இந்திய வீரர்கள்… 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி (Team India) கடைசியாக 2013ஆம் ஆண்டிலும், நியூசிலாந்து அணி (Team New Zealand) 2000ஆம் ஆண்டிலும் கைப்பற்றின. இரு அணிகளும் தற்போது சமபலத்துடன் கோப்பைக்காக இன்று முட்டிமோத இருக்கின்றன.

அந்த வகையில், இன்றைய 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு பின்னர் இந்த 4 வீரர்கள் சர்வதேச ஓடிஐ தொடரில் இருந்து ஓய்வை (4 Retirement Players) அறிவிக்கலாம் அல்லது பிசிசிஐயால் ஓரங்கப்பட்டப்படலாம். இந்திய அணி இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் இந்த 4 வீரர்கள் அணியில் இருந்து விலகுவது ஏறத்தாழ 90% உறுதி எனலாம். அந்த 4 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

Team India Retirement: முகமது ஷமி

34 வயதான முகமது ஷமி (Mohammed Shami) 2027 ஐசிசி உலகக் கோப்பையில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தாண்டே வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மொத்தம் 9 ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இவற்றில் ஷமி விளையாடுவதும் சந்தேகம்தான்.

ஷமி டெஸ்ட் அரங்கில் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக திகழ்வதால் அவரது வேலைப்பளூவை குறைக்க அவரை டெஸ்டில் மட்டும் பயன்படுத்த தேர்வுக்குழு திட்டமிடும். சர்வதேச டி20 அரங்கிலும் பெரிதாக அவர் விளையாடுவதில்லை. அப்படியிருக்கையில் இதுதான் ஷமியின் கடைசி ஓடிஐ போட்டியாக இருக்கலாம். 

Team India Retirement: ரவீந்திர ஜடேஜா

36 வயதான ஜடேஜா (Ravindra Jadeja) ஏற்கெனவே டி20 அணியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது ஃபிட்னஸ் பற்றி நான் சொல்லத்தேவையில்லை. இருந்தாலும் வொயிட் பால் அரங்கில் இவரது பேட்டிங் கொஞ்சம் சுமாராக இருப்பதால் இவருக்கு பதில் வேறு ஆல்-ரவுண்டர்களை சேர்க்க தேர்வுக்குழு திட்டமிடும். 

வாஷிங்டன் சுந்தர், தனுஷ் கோட்டியான் என சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் மட்டுமின்றி சிவம் தூபே, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே, ஓடிஐ அரங்கில் ஜடேஜா விளையாடும் கடைசி போட்டி இதுவாகவே இருக்கும்.

Team India Retirement: ரோஹித் சர்மா

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) இதுதான் கடைசி சர்வதேச போட்டி என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே டி20இல் இருந்து அவர் ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்டில் இந்த WTC சுழற்சி முடிந்துவிட்டது, இனி அடுத்து 2 ஆண்டுகள் அவர் டெஸ்டில் விளையாட உடற்தகுதியும் பெரிதாக இல்லை. 

37 வயதாகிவிட்ட நிலையில் இன்று கோப்பையை வென்றாலும் சரி, தோற்றாலும் சரி அவருக்கு இதுதான் கடைசி ஓடிஐ போட்டி மட்டுமின்றி, சர்வதேச அரங்கில் கடைசியாக போட்டியாகவும் இருக்கும் எனலாம். இனி ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் விளையாடலாம்.

Team India Retirement: விராட் கோலி

2027ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை வரை விளையாடும் அளவிற்கு ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறனை விராட் கோலி (Virat Kohli) வைத்திருக்கிறார். ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை தன்வசம் வைத்துள்ள விராட் கோலி நிச்சயம் 2025-2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரை விளையாடுவார். எனவே, நிச்சயம் 2027 உலகக் கோப்பையிலும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. விராட் கோலியின் சிறந்த பார்மட்டும் ஓடிஐ தான்.

ஆனால், விராட் கோலி ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதில் தோனிக்கு சளைத்தவர் இல்லை. சர்வதேச டி20இல் ஓய்வு பெற்றது தவிர்த்து இந்திய அணி மற்றும் ஆர்சிபி கேப்டன்ஸியை துறந்தது உள்ளிட்டவற்றை எதிர்பாராத விதமாகவே அறிவித்தார். அணியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற நோக்கில் இவர் விளையாடும் கடைசி ஓடிஐ போட்டியாகவும் இது இருக்கலாம். 
ஒருவேளை அடுத்த சில ஆண்டுகளுக்கு விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தால் 2027 உலகக் கோப்பையில் அவரை எதிர்பார்க்கலாம். அவர் இன்று ஓடிஐயில் இருந்து ஓய்வுபெற 50% வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.