சென்னை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் டேனியல் (25 மற்றும் 90+6 வது நிமிடம்) மற்றும் இர்பான் (57 மற்றும் 90-வது நிமிடம்) இருவரும் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். லுகாஸ் (45+3வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரெய் (18-வது நிமிடம்), முகமது சனான் (62-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி 7-வது வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.