`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ – நெகிழும் சந்தோஷ் தயாநிதி

சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் சந்தோஷ் தயாநிதி. ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசருக்கும் இசையமைத்திருந்தார். இப்போது ராமின் ‘பறந்து போ’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அவரிடம் ஒரு மினி சாட்.

பறந்து போ

‘ஏழு கடல் ஏழு மலை’ – ‘பறந்து போ’

” ராம் சார் இயக்கியிருக்கும் ‘பறந்து போ’ படத்திற்கு இசையமைக்கும் போது தான் எனக்கு இந்த வாய்ப்பு அமைந்தது. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசரை திடீரென கொண்டு வர விரும்பினாங்க. அந்த சமயத்தில் யுவன் சார் ரொம்ப பிசியாக இருந்ததால், ராம் சார் டீசருக்கு என்னை இசையமைக்க சொன்னார்.

‘பறந்து போ’வில் என்னோட ஒர்க்கை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கார்னு நினைக்கறேன். அவர் வழக்கமாக கொடுக்கற இசையை விரும்ப மாட்டார். புதுசா, வித்தியாசமான இசையை எதிர்பார்ப்பார். ‘பறந்து போ’ கமர்ஷியல் படம் தான். அதில் ராம் சாரின் ஸ்டைலும் இருக்கும். இந்தப் படம் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் திரையிடலுக்கு ராம் சாரோட நானும் பங்கேற்றது சந்தோஷமா இருக்குது.

ரஹ்மானுடன்..

`முதல் பட வாய்ப்பு…!’

”என்னோட குரு ரஹ்மான் சார்தான். அவரால தான் இசையமைப்பாளர் ஆனேன். லண்டன் டிரினிட்டி காலேஜ்ல பியானோ முடிச்சிட்டு, ரஹ்மான் சாரோட இசை பள்ளியில் தான் படிச்சேன். அதன்பின், ‘கடல்’ படத்துல அவரோட உதவியாளரானேன்.

அப்படியே அவருடனான பயணம் தொடருது. சமீபத்திய ‘ராயன்’, ‘காதலிக்க நேரமில்லை’ வரை பயணிக்கறேன். அவருடன் இருந்தால் நிறைய கத்துக்க முடியும். நான் இசையமைக்கும் படங்களோட பாடல்களை கேட்டுட்டு உடனே போன் செய்து பாராட்டுவார். ரஹ்மான் சாரோட வேலை செய்ய ஆரம்பித்த சமயத்தில் தான் சந்தானம் சார் தன்னோட படத்துக்கு புது இசையமைப்பாளர் தேடிக்கிட்டு இருந்தார். அப்படி வந்தது தான் ‘இனிமே இப்படித்தான்’ பட வாய்ப்பு.

சந்தோஷ் தயாநிதி

இப்ப ராம் சார்கிட்ட ஒர்க் பண்றது கூட, ரஹ்மான் சார்கிட்ட ஒர்க் பண்றது மாதிரிதான் பார்க்கறேன். ஏன்னா, ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கறதா நினைக்கறேன். திருத்தங்கள் சொல்வது, வேலையில் ஒரு பர்ஃபெக்‌ஷன் என இருவரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறைதான் இருக்குது.

‘பறந்து போ” ரிலீஸுக்கு பிறகே அடுத்த படத்தை கமிட் பண்ணும் திட்டமிட்டமிருக்கு’. தனியிசைப் பாடல்கள் அதிகம் கொடுக்கணும்னு விரும்புறேன். ஏன்னா, இன்டிபென்டன்ட் ஆல்பங்களுக்கான வரவேற்பு இப்ப நல்லா இருக்குது. மூணு மாசத்துக்கு ஒரு பாடலாவது கொண்டு வரணும்னு விரும்புறேன். எல்லா மொழிகளிலும் மியூசிக் வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்குது. எல்லா மொழிகள்லேயும் மியூசிக் வீடியோ பண்ணப்போறேன்.” என்கிறார் சந்தோஷ் தயாநிதி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.