இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற சிறிய ரக கார்களில் ஒன்றான மாருதி சுசூகியின் ஆல்டோ K10 காரில் உள்ள முக்கிய வசதிகள், எஞ்சின் விபரம், மைலேஜ் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் 6 ஏர்பேக்குகளை பெற்று மிகவும் பாதுகாப்பான மாடலாக மாறியுள்ள ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
Maruti Suzuki Alto K10 on-road price
ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.23 லட்சம் முதல் ரூ.6.20 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்த காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.7.15 லட்சம் முதல் ரூ.7.52 லட்சம் வரை, பெட்ரோல் மேனுவல் ரூ.5.14 லட்சம் முதல் ரூ.6.79 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.7.04 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரை அமைந்துள்ளது.
Variant | Ex-showroom Price | on-road Price |
Alto K10 STD MT | Rs 4,23,000 | Rs 5,13,961 |
Alto K10 LXi MT | Rs 4,99,500 | Rs 6,02,143 |
Alto K10 VXi MT | Rs 5,30,500 | Rs 6,46,920 |
Alto K10 VXi+ MT | Rs 5,59,500 | Rs 6,78,310 |
Alto K10 VXi AGS | Rs 5,80,500 | Rs 7,03,705 |
Alto K10 VXi+ AGS | Rs 6,09,500 | Rs 7,37,054 |
Alto K10 LXI S-CNG | Rs 5,89,500 | Rs 7,14,543 |
Alto K10 VXI S-CNG | Rs 6,20,500 | Rs 7,51,810 |
(on-road price Tamilnadu)
கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.
1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm டார்க்கினை 3500 rpmல் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் உள்ள மாடல் லிட்டருக்கு 24.39 கிமீ மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 24.90 கிமீ கொண்டவை இணைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 55 hp பவரை 5300 rpm மற்றும் 82 Nm டார்க்கினை 3200 rpmல் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 33.40 கிமீ ஆகும்.